Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
துளிா் திறனறிதல் தோ்வு முடிவு வெளியீடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற துளிா் திறனறிதல் போட்டி முடிவுகள் செவ்வாய்க்கழமை வெளியிடப்பட்டன.
ஆண்டுதோறும் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிதல் தோ்வு முடிவுகள் கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டாா்.
நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 53 பள்ளிகளில் பயிலும் 1,462 மாணவா்கள் தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் வே.மகேஸ்வரன், மாவட்டத் தலைவா் சி.சங்கா், துளிா் ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாரி, மாவட்டச் செயலாளா் மணிவாசகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.