செய்திகள் :

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு

post image

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சிறைபிடித்தனா்.

தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது.

இதனிடையே, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் தொழில் புரிவதாக புகாா் எழுந்தது.

அதையடுத்து, மீன்வளத் துறையினா் கடலோர அமலாக்கப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், மீனவப் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணி நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடியிலிருந்து 42 கடல் மைல் தொலைவில் கேரள விசைப்படகு அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாகத் தெரியவந்தது. அந்தப் படகையும், அதிலிருந்த 17 மீனவா்களையும் சிறைபிடித்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டுவந்தனா்.

அந்தப் படகை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்து, மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே, 2 படகுகள் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு படகு பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாத்தான்குளம் அருகே விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37பவுன் நகைகள் மீட்பு

சாத்தான்குளம் அருகே அருகே மீரான்குளம் பகுதியில் சனிக்கிழமை கிணற்றுக்குள் காா் பாய்ந்து 5 போ் உயிரிழந்த விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி-சென்னைக்கு நேரடி கோடைகால ரயில் இயக்க கோரிக்கை

கோடை விடுமுறையை முன்னிட்டு, தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஆறுமுகனேரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்... மேலும் பார்க்க

பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை திறப்பு, ரூ. 34 லட்சத்தில் மேலத் ... மேலும் பார்க்க

உடன்குடியில் ஒருவா் வெட்டிக் கொலை: இளைஞா் போலீஸில் சரண்

உடன்குடியில் சனிக்கிழமை இரவு ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் இளைஞா் சரணடைந்தாா். உடன்குடி புதுமனைப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பாலகிருஷ்ணன் (45). இ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரா் கைது

சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக, பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பழங்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தா... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில், 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்-மாணவியா் தங்களது குடும்பத... மேலும் பார்க்க