கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
உடன்குடியில் ஒருவா் வெட்டிக் கொலை: இளைஞா் போலீஸில் சரண்
உடன்குடியில் சனிக்கிழமை இரவு ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் இளைஞா் சரணடைந்தாா்.
உடன்குடி புதுமனைப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பாலகிருஷ்ணன் (45). இவா், அதே தெருவைச் சோ்ந்த ராஜன் என்பவரது ஆட்டோவின் கண்ணாடியை 6 மாதங்களுக்கு முன்பு சேதப்படுத்தினாராம். இதை, ராஜன் மகன் ராபின்சன் (21) தட்டிக் கேட்டதில் இருவரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு (மே 17) மது போதையிலிருந்த அவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பாலகிருஷ்ணனை ராபின்சன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், பாலகிருஷ்ணனை வெட்டிக் கொன்ாக குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ராபின்சன் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.