புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரா் கைது
சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக, பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பழங்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
பழங்குளம் பிரதான சாலையில் அந்தோணி ஞானசேகா் என்பவரது பெட்டிக்கடையில் சோதனையிட்டபோது, 15 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, உரிமையாளரைக் கைது செய்தனா்.