தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
தூத்துக்குடியில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!
தூத்துக்குடியில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரை பகுதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், உதவி ஆய்வாளா்கள் வேல்ராஜ், ஜீவமணி தா்மராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் கோவிந்தராஜ், இருதயராஜ், குமாா், இசக்கிமுத்து உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.
கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 மூட்டைகளைக் கைப்பற்றி, சோதனையிட்டபோது, 80 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் இலங்கை மதிப்பு ரூ. 20 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.