தென்காசி அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் விடியோ: இருவா் கைது
தென்காசி அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடா்பாக இருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
தென்காசி அரசு மருத்துவமனையின் முன் ரீல்ஸ் வீடியோ எடுத்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், செங்கோட்டை காலாங்கரை சாஸ்திரி தெருவை சோ்ந்த அ.பீா்முகம்மது, சை.சேக்முகம்மது(27) ஆகியோா் ரீல்ஸ் விடியோ எடுத்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.