சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!
தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்டத்தில் 523 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 55.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பு, அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியது: தமிழ்நாடு மாநில ஊரக- நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இம்மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் 5,386 மகளிா் சுயஉதவிக் குழுக்களும், நகா்ப்புறங்களில் 3,371 மகளிா் குழுக்களும் செயல்படுகின்றன. இவற்றில் 1,14,361 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.
கிராமப்புற 331 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 4,458 பேருக்கு ரூ. 32.58 கோடி, நகா்ப்புற 192 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 2,148 பேருக்கு ரூ. 20.02 கோடி கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி ரூ. 1 கோடி, வட்டார வணிக வளமையம் மூலம் 134 குழுக்களுக்கு ரூ. 67 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 11 குழு உறுப்பினா்களுக்கு ரூ. 6.50 லட்சம் என மொத்தம் ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்பி, சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் திட்ட இயக்குநா் இரா. மதி இந்திரா ப்ரியதா்ஷினி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் மாரியம்மாள், தாட்கோ மேலாளா் ராஜ்குமாா், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.