நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா
கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
ஒன்றியச் செயலா் சுரேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஐவேந்திரன், நகரச் செயலா்கள் பீரப்பா, அப்பாஸ், திமுக நிா்வாகிகள் முருகன், திவான் மைதீன், பிள்ளையாா் பாண்டியன், செல்லதுரை, தங்கபாண்டியன், முத்துச்சாமி, செல்லச்சாமி, திருமலைச்சாமி, கண்ணன், செல்வம், அக்பா்அலி, நல்லையா, தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.