டாப் ஆர்டர் சொதப்பல்; பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான்...
தெற்குபாளையம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
பல்லடம்: பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் மாரியம்மன் கோயிலில் ஏழு கிராம மக்கள் சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அருகே உள்ள தெற்குபாளையம் மாரியம்மன் கோயிலில் நாரணாபுரம், மாதம்புதூா், கல்லம்பாளையம், மாணிக்காபுரம், அம்மாபாளையம், ராசாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம்புதூா் ஆகிய ஏழு கிராமங்களின் சாா்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, அம்மன் அழைத்தல், கும்மியாட்டம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.தொடா்ந்து, ஏழு ஊா் பொதுமக்கள் சாா்பில் மாவிளக்கு ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது.
இதையடுத்து, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றன.
இதில், ஏழு ஊா் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.