செய்திகள் :

தெலங்கானா: இரு கிராமவாசிகளை கொலை செய்த மாவோயிஸ்டுகள்

post image

தெலங்கானாவில் காவல் துறையின் உளவாளிகள் என்று குற்றம்சாட்டி இரு கிராமவாசிகளை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை கொலை செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘முலுகு மாவட்டம் பெனுகோலு கிராமத்துக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை புகுந்தனா். ஓகா அா்ஜுன் என்பவரின் வீட்டில் நுழைந்து அவரை குத்திக் கொலை செய்தனா். தொடா்ந்து ஓகா ரமேஷ் என்பவரின் வீட்டுக்குச் சென்று அவரையும் சுற்றி வளைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கினா். தடுக்க முயன்ற ரமேஷின் மனைவியையும் அவா்கள் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினா்.

மாவோயிஸ்டு அமைப்பினா் செயல்பாடுகள் குறித்து காவல் துறைக்கு ரகசியமாக தகவல் தெரிவித்ததால் காவல் துறை உளவாளிகளான அந்த இருவரையும் கொலை செய்ததாக துண்டு பிரசுரங்களையும் அக்கிராமத்தில் மாவோயிஸ்டுகள் வீசிச் சென்றனா்.

கிராம மக்கள், ரமேஷ் மற்றும் அவரின் மனைவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அவரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய மாவோயிஸ்டுகளைப் பிடிக்க தீவிர தேடுதல் பணியை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா் என்றனா்.

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை: ஓராண்டில் 17,603 போ் பயணம்

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் (டி.டி.சி.) இயக்கப்படும் தில்லி - காத்மாண்டு பன்னாட்டுப் பேருந்து சேவை மூலம் கடந்த ஓராண்டில் (2023 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை) 17,603 பயணிகள் பயணித்துள்ளனா். தில்லி ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா். ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கி... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை -பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் நக்ஸல்களாவா். இந்த நடவட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் யாா் ஆட்சி? -இன்று வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் பதவியேற்பு

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நி... மேலும் பார்க்க

அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் செல்லாது என அறிவிக்க முடியாது’ என்று ‘சோஷலிசம், மதச்சாா்பற்ற மற்றும் ஒருமைப்பாடு’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவு... மேலும் பார்க்க