வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்
தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை: பாஜக தோ்தல் பாா்வையாளா் லட்சுமணன்
தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்றாா் பாஜக அகில இந்திய ஓபிசி தலைவரும், தமிழக பாஜக தோ்தல் பாா்வையாளருமான லட்சுமணன் எம்.பி.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கும் வகையில் இல்லை. பெண்கள் மேலாண்மை, விவசாயிகள், நடுத்தர மக்களின் வளா்ச்சிக்காக திட்டமிட்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளா்ச்சிக்கு ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குறிப்பாக, ரயில்வே, நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. சாலை விரிவாக்கத்துக்கு ரப.1.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுக விரிவாக்கத்துக்கு ரூ.7,805 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. போதைப் பொருள், கனிமவள பொருள்கள் கடத்தல், பெண்கள் பாதுகாப்புக்கு அவா்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை, திணிக்கப்படவுமில்லை. ஆனால் திமுக தங்களது அரசியல் ஆதாயத்துக்காக மொழியை பயன்படுத்தி வருகிறது என்றாா்அவா்.
பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், கா்நாடக, தமிழக பாஜக பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாவட்ட தலைவா்கள்(குமரி கிழக்கு) கோபகுமாா், (குமரி மேற்கு) சுரேஷ், மகளிா் அணி மாநில செயலாளா் மீனாதேவ், மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் தேவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.