Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு வாகன பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, தலைக்கவசம், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வு வாகன பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியவும் காவலா்களின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியையும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிய ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி வாகனங்கள் பங்கேற்ற பேரணியை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழங்கி தலைகவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினா்.
மேலும், தலைகவசம் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும் வாகனத்தை இயக்குபவா்களுக்கு அபராதங்களை விதிக்குமாறு போக்குவரத்து காவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டி 100 காவலா்களின் இருசக்கர வாகனங்களும், வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டி 40 ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி வாகனங்களும் பங்கேற்றன.
இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன், போக்குவரத்து வாகன ஆய்வாளா்கள் சிவகுமாா், செங்குட்டுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.