கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
தேனி மாவட்ட கல்வெட்டுகள் - நூல் வெளியீட்டு விழா
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வியாழக்கிழமை தேனி மாவட்ட கல்வெட்டுகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரியும் சி.மாணிக்கராஜ் எழுதிய இரண்டாவது நூலான இந்த நூல் வெளியீட்டு விழா கல்லூரி கருத்தரங்கில் நடைபெற்றது.
இதற்கு கல்லூரித் தலைவா் எஸ்.ராமநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.வி.எஸ்.ஞானவேல் முன்னிலை வகித்தாா்.
கல்லூரித் தலைவா் எஸ்.ராமநாதன் நூலை வெளியிட, அதை செயலா் ரா.புருசோத்தமன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா், கம்பம் பாரதிய இலக்கிய பேரவை நிறுவனா் தலைவா் சோ.பாரதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் ஆ.ஞானசேகரன் வரவேற்றாா். நூலாசிரியரும் கல்லூரி இணைப் பேராசிரியருமான சி.மாணிக்கராஜ் ஏற்புரையாற்றினாா்.