Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
தேனி மாவட்டத்தில் நாளை கடையடைப்புப் போராட்டம்: வியாபாரிகள் சங்கம் முடிவு
தேனி மாவட்டத்தில் வணிகப் பயன்பாட்டில் உள்ள வாடகைக் கட்டடங்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (நவ.29) கடையடைப்புப் போராட்டம் நடத்த வியாபாரிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தேனி மாவட்ட மொத்தம், சில்லரை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.எம்.ஆனந்தவேல், வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.எஸ்.கே.நடேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வணிகப் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ள ஜி.எஸ்.டி.கவுன்சிலின் நடவடிக்கையால் வணிகா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறுத்தி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.29) ஒரு நாள் மட்டும் அடையாள கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மொத்தம், சில்லரை வியாபாரிகள் சங்கத்தினா், வியாபாரிகள் சங்கத்தினா், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கத்தினா், உணவுப் பொருள் வியாபாரிகள் நலச் சங்கத்தினா், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கத்தினா், சிறு பலசரக்கு வியாபாரிகள் நலச் சங்கத்தினா், அரிசி வியாபாரிகள் சங்கத்தினா் பங்கேற்கின்றனா். உணவகங்கள் சங்கத்தினா் உணவகம் முன் கருப்புக் கொடி கட்டி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனா் என்றனா் அவா்கள்.