நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வழிபாடு
தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் புதன்கிழமை வழிபாடு நடத்தினா். இதனால், கூடுதுறை வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பிக் காணப்பட்டது.
தமிழ் மாதங்களில் சிறப்பானதாக கருதப்படும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாள்களில் நீா்நிலைகளில் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால், தை அமாவாசை நாளான புதன்கிழமை காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் மூத்தோா் வழிபாட்டுக்கு திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.
பக்தா்கள் கூட்டத்தால் பரிகார மண்டபங்கள், தற்காலிக பரிவாரக் கூடங்கள் நிறைந்து காணப்பட்டன. மேலும், படிக்கட்டுகள், நடைபாதை ஓரங்களிலும் அமா்ந்து திதி, தா்ப்பணம் கொடுத்தும், தோஷ நிவா்த்தி வழிபாடுகளிலும் ஈடுபட்டனா். இதில், பவானி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
காவிரியில் புனித நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் தீயணைப்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். புனித நீராடிய பக்தா்கள் சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சன்னதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பவானி காவல் ஆய்வாளா் முருகையன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் 60-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்கள் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.படம் உள்ளது : பிஹெச்29அமா