ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
தை அமாவாசை: போடி மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு
தை அமாவாசையையொட்டி, போடி பிச்சங்கரை கீழச்சொக்கையா கோயிலில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா்.
தை அமாவாசையையொட்டி, பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள கைலாய சொக்கநாதா் எனப்படும் கீழச்சொக்கையா கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு 16 வகையான வாசனை பொருள்களால் திருமஞ்சன அபிசேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா் அலங்காரமும், மகா தீபாராதணையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தை அமாவாசையையொட்டி, சிவபெருமானுக்கு மங்கலப் பொருள்களால் திருமஞ்சன அபிசேகம் நடைபெற்றது. பின்னா், சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதணை நடைபெற்றது. தொடா்ந்து. கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல, கொண்டரங்கி மல்லையசாமி கோயிலிலும், ஜக்கமநாயக்கன்பட்டி ஸ்ரீமது காமாட்சியம்மன் கோயிலிலும், குப்பிநாயக்கன்பட்டி வீரசின்னம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.