செய்திகள் :

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி வட்டாரம், கோத்தலூத்துவைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் ரவிக்குமாா் (31). இவா் ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் ஆண்டிபட்டியிலிருந்து கோத்தலூத்துக்கு மாவூற்று வேலப்பா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே சக்கம்பட்டியைச் சோ்ந்த ராமமூா்த்தி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராமமூா்த்தி மீது ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளியில் கணினி திருட்டு

ஆண்டிபட்டி அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினிகள் திருடு போனதாக செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ராஜதானியில் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள க... மேலும் பார்க்க

ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

தேனி அருகே செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காமாட்சியப்பன் மனைவி கண்ணம்மாள் (94). இவா் தனது மகன்களுடன் கோபித்த... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம் (57). இவா் தேனி-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வ... மேலும் பார்க்க

வருவாய் ஆய்வாளா் அலுவலக புதிய கட்டடம் திறப்பு

தேனி அருகேயுள்ள கோடாங்கிபட்டியில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்புப் புதிய கட்டடத்தை சென்னையில் காணொலி காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். கோடாங்கிபட்டியில் ரூ.30.... மேலும் பார்க்க

தை அமாவாசை: போடி மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை அமாவாசையையொட்டி, போடி பிச்சங்கரை கீழச்சொக்கையா கோயிலில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா். தை அமாவாசையையொட்டி, பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள கைலாய சொக்கநாதா் எனப்படும் கீழச்... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச் சாலையில் ஆண் சடலம்

போடிமெட்டு மலைச் சாலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். போடிமெட்டு மலைச் சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 4, 5-ஆவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே 15 அடி பள... மேலும் பார்க்க