செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: `தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி' - எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

post image

`அனைத்துக் கட்சிக் கூட்டம்' - முதல்வர் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சூழலில் கடந்த 25.2.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வரும் 5.3.2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம்.

புதிய நாடாளுமன்றம் - தொகுதி மறுசீரமைப்பு

இதற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளையும் அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடப்போகிறோம். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

`மக்களவை தொகுதிகள் குறையும் அபாயம்' -ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்காக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே, மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் கடந்து, கட்சிகளை மறந்து பங்கேற்று குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

தொகுதி மறுசீரமைப்பு ஏன்?

இதன் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, `நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில்தான் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார். புதிய நாடுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 543 மக்களவை உறுப்பினர்களும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தசூழலில்தான் புதிய நாடாளுமன்றம் கூடுதல் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். முன்னதாக ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மக்கள் தொகை கட்டுப்பட்டுத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார். அப்போது தொகுதிகள் மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என திருத்தம் செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது. இது வரும் 2026-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவே பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

மக்கள் தொகை

இந்தசூழலில் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தென் மாநிலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக மக்களவை தொகுதிகள் சென்றுவிடும். அதேநேரத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை மிகவும் சரியான முறையில் பின்பற்றி வரும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்" என்றனர்.

எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை நியாயமாக பின்பற்றியதற்காக, தமிழகத்திற்கு கொடுக்கப்படும் தண்டனையா இது?. மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் மொத்த தென் மாநிலக்களுக்கே கூடுதலாக 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்கிறார்கள்.

குபேந்திரன்

இதற்கிடையில் தமிழகம் 8 இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரத்தில் மொத்தமாக 888 இடங்கள் வரும். இதில் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடித்துவிடலாம். அப்போது தென் மாநிலங்களிலிருந்து வாக்குகள் கிடைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். பல மாநிலங்கள் பயனடையும். இது மிகமிக மோசமான திட்டம்.

இந்த நடைமுறையை 2029-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் இடையே பகை ஏற்படும். எனவே தென் மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு உத்திரபிரதேசத்தில் 80 இடங்களை 120 ஆக உயர்த்துகிறீர்கள் என்றால் தமிழகத்தில் 38-ல் இருந்து 55 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். இல்லையென்றால் தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என்கிற பாகுபாட்டை கொண்டுவரும்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

NEP: ``ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' - அமைச்சர் பொன்முடி விளக்கம்

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, ``எல்லோரும் படி... மேலும் பார்க்க

Mk Stalin: ``மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." - முதல்வரை நெகிழவைத்த சிறுமி!

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற சிறுமி தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 10000 நன்கொடையாக வழங்கியுள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடல... மேலும் பார்க்க

`இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இருக்காது' - திருமாவளவன் பேசியதென்ன?

இந்தி திணிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை 'ஒரே நாடு', 'ஒரே மொழி' என்கிற அடிப்... மேலும் பார்க்க

Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்'' - ஸ்டாலின்

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.அந்தக் கடிதத்தில், " ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போரா... மேலும் பார்க்க

Doctor Vikatan: அப்பாவின் பல வருட சிகரெட் பழக்கம், குடும்பத்தாரின் பயம்... மீட்க முடியுமா?

Doctor Vikatan: என்அம்மாவும் அப்பாவும் வெளியூரில்தனியே வசிக்கிறார்கள். அப்பாவுக்கு 70 வயதாகிறது. பல வருடங்களாக அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொடர்கிறது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதைநிறுத்த மற... மேலும் பார்க்க