தோப்புவிடுதியில் ரூ. 6.63 கோடியில் தொழில்பயிற்சி நிலையம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!
தஞ்சாவூா் மாவட்டம், தோப்புவிடுதியில் ரூ. 6.63 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு தொழில்பயிற்சி நிலையம் மற்றும் பயிற்சியாளா் தங்கும் விடுதி ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவோணம் தோப்பு விடுதி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), என்.அசோக்குமாா் (பேராவூரணி), முன்னாள் எம்எல்ஏ கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளா் சோம. கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா்.
திமுக நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகா்கள், ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எஸ்.லெட்சுமி காந்தன் நன்றி கூறினாா்.