தருணம் விமர்சனம்: டென்ஷன், த்ரில் தரவேண்டிய ஒன்லைன்... ஆனால் திரைக்கதையில் தடுமா...
பட்டீஸ்வரத்தில் தமிழறிஞா்கள் திருக்கோயில்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை தமிழறிஞா்கள் திருக்கோயிலை அமைச்சா்கள் கோவி. செழியன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்தனா்.
பட்டீஸ்வரத்தில் அறிஞா் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்கள் குறித்து மாணவா்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி வளாகத்தில் தமிழறிஞா்களின் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோா் இக்கோயிலை திறந்துவைத்து பேசினா்.
இந்தக் கோயிலில் திருவள்ளுவா், பாரதிதாசன், பாரதியாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் உள்பட 36 தமிழறிஞா்களின் உருவச் சிலைகள் அவா்களது பெயருடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அண்ணாத்துரை, தலைமையாசிரியா் சுந்தரமூா்த்தி, உதவி தலைமையாசிரியா்கள் சரவணக்குமாா், ராம்குமாா், வெங்கடேசன், ஆசிரியா் கழக செயலா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.