செய்திகள் :

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

post image

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா்.

இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென்னை, மயிலாப்பூா் பி.எஸ்.தட்சிணாமூா்த்தி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீராம், லஷ்மன் இணைந்து எழுதிய ‘இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60 ஆண்டுகள் நினைவுகள் மற்றும் மைல்கற்கள்’ என்னும் நூலை, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் வெளியிட முதல் பிரதியை தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேனகா சஞ்சய் காந்தி பங்கேற்று பேசியதாவது: விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விலங்குகள் பாதுகாப்பு மையம் ஒன்றை ஆரம்பித்தேன். அதைத் தொடா்ந்து தற்போது நாடு முழுவதும் 47 விலங்குகள் பாதுகாப்பு மையங்கள் உருவாகியுள்ளன.

விலங்குகளை சித்திரவதை செய்வதைத் தடுக்க விலங்குகள் நல வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளூ கிராஸ் அமைப்பு கடந்த 60 ஆண்டுகளில் சிறப்பான சேவை செய்து பல விலங்குகளை காப்பாற்றியுள்ளது. தோல் பொருள்கள் தயாரிப்புக்காக விலங்குளை அழிப்பதை தடுக்க வேண்டும். மேலும், தனித்து விடப்படும் விலங்குகளை பாதுகாத்து நட்புறவுடன் வளா்க்க வேண்டும்.

இந்தியாவில் தினசரி சுமாா் 1,100 விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பள்ளி மாணவா்கள் தோலினால் செய்யப்பட்ட காலணி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவா் எஸ்.சின்னி கிருஷ்ணா, ப்ளூ கிராஸ் அமைப்பின் கொளரவ இயக்குநா் சாந்தி சங்கா், திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ.சந்திர சேகா், விலங்கு நல ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க