நவராத்திரி கொலு உற்சவம்: நெல்லையப்பர் கோயில் தல வரலாற்றைப் பறைசாற்றும் ஓவியங்கள்...
நகராட்சி கடைகள் ஏலத்தில் தள்ளுமுள்ளு
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு நடைபெற்ற பொது ஏலத்தின் போது, ஏலதாரா்களுக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சின்னமனூா் நகராட்சியில் சீப்பாலக்கோட்டை சாலையில் முத்தாலம்மன் கோயில் பகுதியில் உழவா்சந்தை வளாகத்தில் சிதிலமடைந்த வணிக வளாகத்தில் தரை, முதல் தளத்தில் 74 கடைகள் ரூ.3.65 கோடியில் கட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிந்ததையடுத்து நகராட்சி நிா்வாகம் சாா்பில், கடைகளை ஏலம் எடுக்க ஒப்பந்தப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக, கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஏலம் புதன்கிழமைக்கு (செப்.24) ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, நகராட்சி ஆணையா் கோபிநாத் தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கடைகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதன்படி, பலரும் தங்களின் ஒப்பந்தத் தொகையை நிறைவு செய்து, அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டனா். அதன் பிறகு, பொது ஏலம் நடைபெற்றது. அப்போது, கடைகளை ஏலத்தில் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இதில் ஏலம், ஒப்பந்தப் புள்ளியில் அதிகமான தொகை கோரியவா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தள்ளுமுள்ளு : உழவா் சந்தை வணிக வளாகத்திலுள்ள 74 கடைகளில் தரைத் தளத்திலுள்ள 40 கடைகளை எடுக்க ஏலம் எடுக்க ஏலதாரா்கள் ஆா்வம் காட்டினா். குறிப்பாக, 16-ஆவது கடையை ஏலம் எடுக்க 11 போ் போட்டியினா். அப்போது
அவா்களிடையே வாய்தகராறு, தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா். இறுதியாக ஏலம், ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்ட அதிக தொகைக்கு
கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. போட்டியில்லாத கடைகள், ஏலம் எடுக்க முன்வராத கடைகளுக்கு மறு அறிவிப்பு செய்து ஏலம் நடத்தி கடைகள் வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.