MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
பல்லடம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்குவதற்காக கோவைக்கு கடந்த 5-ஆம் தேதி காரில் வந்தபோது 4 போ் கொண்ட கும்பல் காரை வழிமறித்து அவரிடமிருந்து ரூ.1.10 கோடி பணத்தை பறித்துச் சென்றது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.97 லட்சத்து 96 ஆயிரம் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரியான கரூா் குளித்தலையைச் சோ்ந்த அலாவுதீன் ( 53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், ஏா்கன் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.