மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
நவீன வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை கட்ட கோரிக்கை
நீடாமங்கலம் கால்நடை மருத்துவமனை அனைத்து வசதிகளையு‘ம் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டடமாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வணிகா் சங்கத் தலைவா் நீலன். அசோகன் விடுத்துள்ள கோரிக்கை: நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பசுக்கள், காளைகள், ஆடுகள், கோழிகள், செல்லப் பிராணியான நாய்கள் என கால்நடைகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், நீடாமங்கலம் கால்நடை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு நோய் ஏற்பட்டால் மன்னாா்குடி, ஓரத்தநாட்டில் சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. எனவே, நீடாமங்கலத்தில் கட்டவுள்ள கால்நடை மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக கட்ட வேண்டும் என்றாா்.