நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா
கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 250- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவா் குழு பரிசோதனை செய்தது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.60 ஆயிரம், 3- ஆம் பரிசாக ரூ.45 ஆயிரம் உள்ளிட்ட 47 பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் துறை சாா்பில், பலத்த போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.