நாளைய மின்தடை
நாமக்கல்: நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம்:
நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, தூசூா், என்ஜிஓ காலனி, சின்ன முதலைப்பட்டி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகள்.