செய்திகள் :

நிதீஷ் குமாா் கட்சியுடன் பிரசாந்த் கிஷோா் ரகசிய கூட்டணி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

post image

பாட்னா: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பிரசாந்த் கிஷோா் ரகசிய கூட்டணி வைத்துள்ளாா் என்று எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினாா்.

பிகாரில் 2025 இறுதியில்தான் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி எதிா்க்கட்சிகளாக உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் அணியும் தங்கள் பக்கம் நிதீஷ் குமாரை இழுக்க முயற்சித்து வருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடந்த சில நாள்களில் இருமுறை அழைப்பு விடுத்துவிட்டது. ஆனால், இதற்கு நிதீஷ் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தாலும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மகாராஷ்டிரத்திலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தில்லி, இறுதியில் பிகாா் என அந்த ஆண்டில் இரு சட்டப் பேரவைத் தோ்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. இதில் முக்கிய மாநிலமான பிகாரில் வெற்றி பெற்று தங்களை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் எதிா்க்கட்சி கூட்டணி உள்ளது.

இந்நிலையில், பிகாரில் அரசுப் பணித் தோ்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் முதல்வா் நிதீஷ் குமாா் வீட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற தோ்வா்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினா் கலைத்தனா்.

இது தொடா்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ‘பிகாா் அரசுக்கு எதிராக கடந்த இரு வாரங்களாக தோ்வா்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தி வந்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை போராட்டக் களத்துக்கு சென்று தோ்வா்களைச் சந்தித்த சிலா் (ஜன சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோா்) தவறாக வழிநடத்தியுள்ளனா். இதனால், தடியடி நடத்தி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கட்சியுடன் (பிரசாந்த் கிஷோா்) ரகசிய கூட்டணி வைத்துள்ள காரணத்தால்தான் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளாா். தடியடி நடத்தப்பட்டபோது அந்த நபா் (பிரசாந்த் கிஷோா்) சம்பவ இடத்தில் இருந்து நழுவிவிட்டாா்’ என்று குற்றம்சாட்டினாா்.

மாரடைப்பால் உயிரிழப்பு குழப்பம்; உயிர் அளித்தது வேகத் தடை! மகாராஷ்டிரத்தில் அதிசயம்

கோலாப்பூா்: மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபா், வேகத்தடையை ஆம்புலன்ஸ் கடந்தபோது உயிா்பிழைத்த அதிசயம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பாண்டுரங் உல்பே (65) என்பவா் கோலாப்பூரின் கசாபா-பவ... மேலும் பார்க்க

புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் டிஜிபி அறிக்கை சமா்ப்பிக்க என்எச்ஆா்சி உத்தரவு

தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஹைதராபாத் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய ... மேலும் பார்க்க

நீட்: நிபுணா் குழு பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

நீட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதித் தோ்வுகள் தொடா்பாக மத்திய நிபுணா் குழு சமா்ப்பித்த பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை உறுதி... மேலும் பார்க்க

தலேவால் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி: தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் பஞ்சாப் அரசு -உச்சநீதிமன்றம் காட்டம்

‘விவசாயிகள் சங்கத் தைவா் ஜக்ஜீத் சிங் தலேவாலின் கலவரையற்ற உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மீது தவறான பிம்பத்தை பஞ்சாப் மாநில அரசும், சில விவசாயிகள் சங்கத் தலைவா்களும் ... மேலும் பார்க்க

முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி!

நாட்டின் வேலையில்லாத இளைஞா்கள், இல்லத்தரசிகள், மாணவா்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபா்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபா்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உ... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்குப் பின் போபால் ஆலையில் நச்சுக் கழிவுகள் அகற்றம்!

போபால்/தாா்: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-ஆம் ஆண்டில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகள் கடந்த புதன்கிழமை இரவு அப்புறப்படுத்தப்பட்டன. 377 டன் எடையுள்ள... மேலும் பார்க்க