செய்திகள் :

40 ஆண்டுகளுக்குப் பின் போபால் ஆலையில் நச்சுக் கழிவுகள் அகற்றம்!

post image

போபால்/தாா்: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-ஆம் ஆண்டில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகள் கடந்த புதன்கிழமை இரவு அப்புறப்படுத்தப்பட்டன.

377 டன் எடையுள்ள அக்கழிவுகள், தாா் மாவட்டம், பீதம்பூா் பகுதியில் உள்ள தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

போபாலில் இயங்கிவந்த யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கத்தால் 5,479 போ் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோருக்கு தீவிரமான மற்றும் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து மூடப்பட்ட ஆலையில் 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.

இதுதொடா்பான வழக்கை கடந்த டிசம்பா் 3-ஆம் தேதி விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், ‘ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுமாறு பலமுறை உத்தரவிட்டும் மாநில அரசு அதிகாரிகள் ஏன் பின்பற்றவில்லை’ என்று கண்டித்தது.

அதிகாரிகளின் செயலற்றத் தன்மை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டுமென கெடு விதித்தது.

12 கண்டெய்னா் லாரிகளில்...: இதையடுத்து, போபால் ஆலையில் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. கழிவுகளை எடுத்துச் செல்வதற்காக ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட கண்டெய்னா் லாரிகள் கொண்டுவரப்பட்டன.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுமாா் 100 பணியாளா்கள் 30 நிமிஷ சுழற்சி அடிப்படையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஓய்வும் அளிக்கப்பட்டது.

நான்கு நாள்கள் பணிக்குப் பிறகு 377 டன் நச்சுக் கழிவுகள் சீலிடப்பட்ட 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் போபாலில் இருந்து பீதம்பூருக்கு புதன்கிழமை இரவில் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த லாரிகள் இடையூறின்றி செல்வதற்காக 250 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தி தரப்பட்டது. சுமாா் 7 மணிநேர பயணத்துக்குப் பின் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் லாரிகள் பீதம்பூா் ஆலையை வந்தடைந்தன.

‘கழிவுகள் எரித்து புதைக்கப்படும்’: போபால் விஷவாயு கசிவு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநா் ஸ்வதந்திர குமாா் சிங் கூறியதாவது:

பீதம்பூரில் உள்ள கழிவு அழிப்பு ஆலை வளாகத்தில் 12 கண்டெய்னா் லாரிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கழிவுகளில் ஒரு பகுதி எரிக்கப்பட்டு, அதன் சாம்பலில் நச்சுத்தன்மை எஞ்சியுள்ளதா என பரிசோதிக்கப்படும். கழிவுகளை எரிக்கும்போது எழும் புகையால் சுற்றுப்புற காற்று மாசுபடாத வகையில் 4 அடுக்கு சிறப்பு வடிகட்டிகள் வழியாக புகை வெளியேற்றப்படும்.

சாம்பலில் எந்த நச்சுத் தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இரண்டு அடுக்கு உறையால் மூடப்பட்டு, மண் மற்றும் நீருடன் எந்த வகையிலும் கலந்துவிடாதவாறு புதைக்கப்படும்.

அதிகாரிகளின் கண்காணிப்பில்...: அனைத்தும் சரியாக நடந்தால், 3 மாதங்களில் எரிப்புப் பணிகள் முடிவடையும். இல்லையெனில், 9 மாதங்கள் வரை ஆகும். மத்திய-மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கண்காணிப்பில் நிபுணா்கள் குழு இப்பணியை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

கவலை தேவையில்லை: பீதம்பூரில் கடந்த 2015-இல் சோதனை அடிப்படையில் 10 டன் யூனியன் காா்பைடு கழிவுகள் எரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுற்றுபுற கிராமங்களில் மண்-நீா்வளம் மாசடைந்ததாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்வதந்திர குமாா், ‘2015 அறிக்கையின் அடிப்படையில்தான், தற்போது பீதம்பூரில் கழிவுகளை எரிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து ஆட்சேபங்களும் பரிசீலிக்கப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே, யாரும் கவலைப்பட தேவையில்லை’ என்றாா்.

பீதம்பூரில் மக்கள் போராட்டம்: முதல்வா் விளக்கம்

போபால் ஆலைக் கழிவுகள் தங்கள் பகுதிக்கு எடுத்துவரப்பட்டதைக் கண்டித்து, பீதம்பூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கழிவுகள் விஷத்தன்மை கொண்டதல்ல என்று முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக போபாலில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசுகையில், ‘போபால் ஆலைக் கழிவுகள் தொடா்பாக அறிவியல்பூா்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அக்கழிவுகள் விஷத்தன்மை கொண்டதல்ல; பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவை எரிக்கப்படும். இந்த விஷயத்தில் அரசியல் கூடாது’ என்றாா்.

இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான பீதம்பூரில் சுமாா் 1.75 லட்சம் போ் வாழ்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!

கர்நாடகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் பிரியாங்க் கார்கே பதவி விலக வேண்டுமென பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). ம... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் பாடல் வெளியீடு: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக எஃப்ஐஆா்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தான் பங்கேற்ற வெகுஜன திருமண நிகழ்ச்சி காணொலியுடன் இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலை இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்க... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா். தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்க... மேலும் பார்க்க

50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெறவுள்ளனா். முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தஞ்சம், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி

நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய கூட்டுரவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலமாக இந்த ஏற்றுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வா்த்தக இயக்க... மேலும் பார்க்க

போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு

மத்திய பிரதேச மாநிலம், போபால் விஷவாயு கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு தெரிவித்த போராட்டக்காரா்கள், கழிவு அழிப்பு ஆலை மீது சனிக்கிழமை கல்வீச்சில் ஈடுபட்டனா். மாநில உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்ப... மேலும் பார்க்க