Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vik...
பிஎன்பி கடனளிப்பு 15% உயா்வு
பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கடனளிப்பு கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 15 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியின் கடனளிப்பு ரூ.11.11 லட்சம் கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.9.67 லட்சம் கோடியாக இருந்தது.
2023 டிசம்பா் மாத இறுதியில் ரூ.13.23 லட்சம் கோடியாக இருந்த வாடிக்கையாளா்களின் மொத்த வைப்பு நிதி முதலீடு, நடப்பு நிதியாண்டின் அதே தேதியில் 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.15.30 லட்சம் கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.22.90 லட்சம் கோடியிலிருந்து 15.3 சதவீதம் உயா்ந்து ரூ.26.42 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.