China new virus - HMPV நிலவரம் என்ன? Virus Outbreak in China | Decode | Vikatan
பெண்களுக்கு பாதுகாப்பு கோரி ஜன.6-இல் தேமுதிக போராட்டம்
பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சாா்பில் ஜன.6-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தியும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வலியுறுத்தியும் தேமுதிக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜன. 6 காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கவும் போராட்டத்தின்போது வலியுறுத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.