ஹிட்லிஸ்டில் 3 அமைச்சர்கள்... மீண்டும் மாற்றம்? STALIN Warning! | Elangovan Expl...
நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்: உணவுத் துறை அமைச்சா் உறுதி
நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதியளித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் என்.அசோக்குமாா் (பேராவூரணி ) எழுப்பினாா். இதற்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்:
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நியாய விலைக் கடைகளில் 34,793 கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,535 பகுதிநேர கடைகளுக்கு தனி குறியீடு, விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகள் பிரிப்பு: நகரப் பகுதிகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 800 அட்டைகளுக்குக் குறையாலும், ஊரகப் பகுதிகளில் 800 அட்டைகளுக்கு மிகாமலும், 500-க்கு குறையாமலும் இருந்தால் தனிக் கடைகள் பிரித்து வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சா்க்கரை ஆகியன எந்தத் தடையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்துக்குத் தேவையான பொருள்களில் 60 சதவீதமானவை, முந்தைய மாதத்தின் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டு விடுகின்றன. மாதத்தின் முதல் தேதியிலிருந்து பொருள்களை எந்த நேரத்திலும் வாங்கிக் கொள்ளலாம். எந்தக் கடையிலாவது பொருள்கள் ஒரே நேரத்தில் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி உறுதியளித்தாா்.