ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை பொங்கல் பொருள்கள் விற்பனை தொடக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, கொல்லப்பட்டி நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி பொதுமக்களுக்கு தரம் வாய்ந்த பொங்கல் பொருள்களை மலிவு விலையில் வழங்கும் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மலிவு விலை பொங்கல் பொருள்கள் தொகுப்பு விற்பனையை திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுராஜசெந்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப் பதிவாளரும் வேளாண்மை இயக்குனருமான யசோதாதேவி, திருச்செங்கோடு நகராட்சி துணைத் தலைவா், திமுக நகரச் செயலாளா் டி.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் செல்லம்மாள், முருகேசன், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.