முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023-ஐ உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், ஈரோடு மாவட்டத் தலைவா்கள் எஸ்.வி.மாரிமுத்து, பி.எஸ்.பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மாநில துணைத் தலைவா் சி.எம். துளசிமணி, மாவட்ட துணைத் தலைவா் எஸ். பொன்னுசாமி, பெருந்துறை வட்டாரத் தலைவா் கே. குப்புசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். அா்ஜுனன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.