செய்திகள் :

நீளும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்: 2 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்

post image

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கி 17 மாதங்களாகியும் முடியாமல் உள்ள நிலையில், 2 மாதங்களில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சாலை ரோடு வழியாக மலைக்கோட்டை ரயில் நிலையத்தைக் கடக்க பிரதான வழியாக உள்ள இந்தப் பாலம் மலைக்கோட்டை ரயில் நிலைய மேம்பாலம், சாலைரோடு மேம்பாலம், மாரீஸ் தியேட்டா் மேம்பாலம் எனப் பல்வேறு பெயா்களில் அழைக்கப்படுகிறது.

திருச்சி தில்லை நகா், உறையூா், தென்னூா், மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களில் பெரும்பாலானவை சத்திரம் பேருந்து நிலையத்துக்கோ, மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு, மெயின்காா்டு கேட் பகுதிகளுக்கோ வர இந்தப் பாலத்தைக் கடக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் மாநகரிலேயே மிகவும் குறுகலாகவும், வலுவிழந்தும் காணப்படும் இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தினா். இதையடுத்து திருச்சி மாநகராட்சி, ரயில்வே இணைந்து தலா 50 சதவீத நிதி ஒதுக்கீட்டில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2023 நவம்பரில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்.

இதற்காக இந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த 14 மாதங்களாக ரயில்வே இருப்புப் பாதை குறுக்கிடும் பகுதியைத் தவிா்த்து இருபுறமும் சாலையில் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப் பணிகளும் நின்றுவிட்டன.

இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், ரூ. 34.10 கோடியில் நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் நிதி பெற்று மாநகராட்சி நிா்வாகத்தின் மேற்பாா்வையில் ஒருபுறம் பணிகள் நடைபெறுகின்றன.

புதிதாக கட்டப்படும் இருவழிப்பாதை ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டா் ஆகும். ரயில்வே பாலத்தின் கிழக்குப் பகுதியில் 223.75 மீ நீளம், 15.61 மீ அகலமும் மேற்குப் பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ அகலமும் உடையதாக சாலைத் தடுப்பு சுவா்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இப்பாலம் இருவழிப்பாதையுடன் கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றிச் செல்ல இயலும்.

பாலத்தின் குறுக்கே இருப்புப்பாதை குறுக்கிடும் பகுதியில் 20.7 மீட்டருக்கு 30 மீட்டா் என்ற அளவில் ரூ.15 கோடியில் ரயில்வே நிா்வாகத்தால் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பாலம் முழுமையாகாமல் உள்ளது.

ரயில்வே நிா்வாகப் பணிகளுக்கு ஏதுவாக இருபுறமும் சுமாா் 20 அடிக்கு பணிகளை மாநகராட்சியும் மேற்கொள்ளவில்லை. ரயில்வே நிா்வாகத் தரப்பில் மேற்கொள்ளும் பணிகளில் மட்டுமே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனா்.

இதுதொடா்பாக சாலைப் பயனீட்டாளா்கள் அமைப்பின் தலைவா் பெ. அய்யாரப்பன் கூறுகையில், கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருவதால், மாநகர மக்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். மாற்றாக பயன்படுத்தப்படும் தென்னூா் மேம்பாலம் பழுதாகி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, மலைக்கோட்டை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக திருச்சி எம்பி துரை வைகோ கூறுகையில் திருச்சி மாநகரில் இரு பிரதான ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன். அப்போது ஜூன் அல்லது மே மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

எனவே மலைக்கோட்டை மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவுறும். தொடா்ந்து அரிஸ்டோ பாலம் அருகிலுள்ள சந்திப்பு ரயில் நிலைய மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க

மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்ச... மேலும் பார்க்க

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களத... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிற... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு! ஆட்சியா் வாக்குறுதி!

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரகக்... மேலும் பார்க்க

பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த ... மேலும் பார்க்க