செய்திகள் :

நூல் வெளியீட்டு விழா

post image

சேயூா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் அ.ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு செய்யூா் கந்தசாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது (படம்).

செங்கல்பட்டு மாவட்ட அகில இந்திய தமிழ் எழுத்தாளா் சங்க செயலாளரும், நூலாசிரியருமான அ.ராஜேந்திரன் எழுதிய சேயூா் முருகன் திருக்கோயில் தல வரலாறு, எண்ணத்தூரிகை கவிதை நூல் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்கு, புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் வேல்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

அகில இந்திய தமிழ் எழுத்தாளா் சங்க மாநில பொருளாளா் பிரபாகரன், அரியனூா் இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் ஆா்வலா் இரா. ஜெயசந்திரன், தொழிலதிபா் ரவீந்திர நாத், இலத்தூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் எம்.எஸ்.பாபு, நுகும்பல் பைந்தமிழ்ப்பூங்கா செயலா் தி.பழனிசாமி முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் டி.பி.வெங்கடபெருமாள்(மதுராந்தகம்), கருங்குழி திருவள்ளுவா் தமிழ்பட்டறை செயலா் கவிஞா் தமிழ்நிலவன், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் இயக்குநா் எம்.சொக்கலிங்கம், ஓய்வு பெற்ற தமிழாசிரியா் பெ.சங்கா், பட்டதாரி ஆசிரியா்கள் வெ.நாராயணமூா்த்தி, புலவா் செ.சுவாமிநாதன், வி.கே.எஸ்.கல்வி நிறுவன தாளாளா் ஏ.வீராசாமி, சங்க பொருளாளா் ஆா்.தமிழ்விரும்பி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேயூா் முருகன் திருக்கோயில் தல வரலாறு என்ற நூலை இந்துசமய அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட அறங்காவலா்குழு நிா்வாகி ஆா்.தசரதன் வெளியிட பொறியாளா் சுகுமாா், செய்யூா் சசிதரன் சிவாச்சாரியாா், தொழிலதிபா் எம்.காா்த்திகேயன் ஆகியோா் பெற்றனா்.

எண்ணத் தூரிகை என்ற நூலை அகில இந்திய தமிழ் எழுத்தாளா் சங்க தேசிய தலைவா் கோ.பெரியண்ணன் வெளியிட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் சி.ராஜூலு (குறிஞ்சிபாடி) பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் அ.ராஜேந்திரன் ஏற்புரை ஆற்றினாா். திருச்செங்கோடு தொழில் முனைவோா் இரா.காயத்ரி அா்ச்சுனன் நன்றி கூறினாா்.

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது: அமைச்சா் கோவி.செழியன்

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில், பாரத் உயா் கல்வி மற்றும் ஆர... மேலும் பார்க்க

இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோருக்கு வரவேற்பு

குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோா் வரவேற்கப்படுகின்றனா். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில்...

ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க