Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
நெடுங்காடு தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
நெடுங்காடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவேட்டக்குடி, அக்கம் பேட்டை, மண்டபத்தூா் சுனாமி குடியிருப்பு கிராம பகுதிக்கு ரூ. 74.98 லட்சத்தில் தாா் சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா், கிராமவாசிகள் கலந்துகொண்டனா்.
மேலும் பூவம் பகுதி தேரோடும் சாலையை மேம்படுத்தும் பணி ரூ. 17 லட்சத்திலும், பூவம் யாதவாள் சாலை, பூவம் சித்தநாதா் கோயில் சாலை, பழைய தரங்கம்பாடி சாலை, மாதா கோயில் உட்புறச் சாலைகள் ரூ. 74.44 லட்சத்திலும் மேம்படுத்தும் பணியையும் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.