'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
பஞ்சாபில் பிரதமா் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு: ஆதாரங்கள் கோரிய மாநில அரசின் மனு நிராகரிப்பு
கடந்த 2022-இல் பிரதமா் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு சம்பவத்தின் சாட்சியங்களின் அறிக்கைகளை வழங்குமாறு அந்த மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை மேற்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 2022, ஜன.12-இல் உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையை வழங்கக்கோரி பஞ்சாப் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், ‘பிரதமா் மோடியின் சுற்றுப்பயண அட்டவணை மற்றும் அவா் பயணிக்கும் வழித்தடம் குறித்து முழுவதுமாக அறிந்தும் ஃபெரோஸ்பூா் மூத்த காவல் கண்காணிப்பாளா் அவ்நீத் பொறுப்பற்ற முறையில் பணியாற்றியுள்ளாா். பிரதமரின் பாதுகாப்புக்காக போதிய காவல் படை ஒதுக்கப்பட்ட பிறகும் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த அவா் தவறியுள்ளாா். எனவே, மல்ஹோத்ரா விசாரணைக் குழுவிடம் அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தை விட்டுவிட்டு பஞ்சாப் அரசு தனியாக விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது’ எனக் கூறிய நீதிபதிகள் அமா்வு பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.