தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, படகில் இருந்து தவறி விழுந்து மாயமான மீனவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 391 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
நள்ளிரவு மீன்பிடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருக்கும் போது, அருண்குமாரின் விசைப்படகில் சென்ற ஜோசுவா, சுமீத், வெங்கடேசன், சினேகன், சந்தியா, ராஜ், உதயன் சுரேஷ் (43) ஆகிய 8 மீனவா்கள், மீன்களை பிரித்துக் கொண்டிருக்கும் போது, சுரேஷ் என்ற மீனவா் கடலில் தவறி விழுந்தாா்.
இதையடுத்து, மாயமான மீனவரைச் சக மீனவா்கள் தேடி பாா்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், கரை திரும்பிய மற்ற மீனவா்கள் இது குறித்து மீன்வள, மீனவா் நலத் துறை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான மீனவரைத் தேடி வருகின்றனா்.