நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
படகுகளில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை
தொண்டி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவா்களுக்கு மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பண்டிகைக் காலங்களில் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மீனவா்கள் கடலுக்குள் படகு சவாரி அழைத்துச் செல்கின்றனா். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மீன் வளத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், உதவி ஆய்வாளா் குருநாதன், ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரையிலும் உள்ள மீனவா்கள் படகுகளில் கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனா். மேலும், தடையை மீறி ஏற்றிச் சென்றால் படகு பறிமுதல் செய்வதோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.