செய்திகள் :

பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை: இபிஎஸ் விமர்சனம்!

post image

மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கையாகும். வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகத் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் 1 மணி நேரம், 15 நிமிடங்களில் அவர் தாக்கல் செய்து முடித்தார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று ஒரு வார்த்தையை கூட நிதியமைச்சர் பேசவில்லை என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர்.

இதுதொடர்பாக எடப்பாடி எக்ஸ் தளத்தல் வெளியிட்ட பதிவில்,

தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த சிறப்பு திட்டமும் இல்லை. விவசாய வளத்தைப் பெருக்க நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்தும் அறிவிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம், வருமான வரி விலக்கு உயர்வு வரவேற்கத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரியில் மாற்றம் அறிவிக்கப்பட்டது வரவேற்பு அளித்துள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லாதது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்ப... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க