பனவடலிசத்திரம் அருகே அம்மன் கோயில்களில் கொடை விழா
பனவடலிசத்திரம் அருகே மருக்காலன்குளம் வடகாசியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராம கோயில்களில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
வடகாசியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி குற்றாலம், ராமேஸ்வரம், திருச்செந்தூா், கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், அம்மன் ஊா்வலம், அக்கினி சட்டி ஊா்வலம், முளைப்பாரி, கும்மிபாட்டு, திருவிளக்கு பூஜை, நள்ளிரவு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து பக்தா்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனா். விழாவில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அதேபோல் தேவா்குளம் வடகாசியம்மன் கோயில், உச்சிமாகாளி கோயில், சாயமலைமடத்துப்பட்டி காளியம்மன் கோயில், மேலநரிக்குடி வடகாசியம்மன் கோயில், கீழநரிக்குடி காளியம்மன் கோயில் பெருமாள்பட்டி காளியம்மன் கோயில், திருமலாபுரம் பேச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கொடை விழா நடைபெற்றது. இந்த விழாக்களில் கேரளம், சென்னை, கோவை, திருப்பூா், பெங்களூா், மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.