ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
பனையூா் பகுதியில் இன்று மின்தடை
பனையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
பனையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அய்யனாா்புரம், பனையூா், சொக்கநாதபுரம, சாமநத்தம், பெரியாா்நகா், கல்லம்பல், சிலைமான், கீழடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
நரசிங்கம்பட்டி பகுதியில் நாளை மின்தடை: நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (டிச.18) நடைபெற உள்ளன. இதன் காரணமாக, முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி,சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூா், மலையாண்டிபுரம், புதுபட்டி, தேத்தாங்குளம், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபும், சூரகுண்டு, தெற்குத்தெரு, மருதூா், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வலச்சிகுளம், நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின் பகிா்மான வட்ட மதுரை கிழக்கு செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்தாா்.