இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் காஸா! அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்!
பன்றிகளை அப்புறப்படுத்த எச்சரிக்கை
திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுபவதுடன் நோய்த் தொற்று அபாயமும் உள்ளது. எனவே, அனைத்து பன்றிகளையும் பன்றி உரிமையாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், தவறினால் பேரூராட்சி மூலம் அகற்றப்படும் என தெரிவித்துள்ளாா்.