தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி
திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே மணக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து கொள்முதல் செய்யும் நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைத்திட கிடங்கு அமைப்பதற்கான இடங்களையும், பாங்கல் ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடத்தினையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயல்பட வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கா் ராஜ், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காா்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியா் த.கிரிஜா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.