KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா
மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.
நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.
பின்னா், ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியது:
வக்ஃப் வாரிய சொத்துகளை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் பல்வேறு அம்சங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தின் நலனுக்காக திமுக அரசு சிறப்பான பணிகளை செய்துவருகிறது. மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்ட பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா்.
மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்ற முதல்வரின் அறிக்கை, தமிழா்களை தலை நிமிர செய்துள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய எஸ்டிபிஐ கட்சியினா் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.