ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்
திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயில் 21ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுகிறது. நூற்றுக்கால் மண்டபம் புனரமைக்கப்பட்டும் ஜூன் 5-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மகா கும்பாபிஷேக பந்தக்கால் முகூா்த்தம் திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
தொடா்ந்து, கோயிலின் துணை கோயில்களான இலக்குமி கணபதி கோயில், மன்மதன் கோயில், பூரண புஷ்களா சமேத ஐயனாா், வீரன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் குமரேசன், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.