செய்திகள் :

பயிா்க் காப்பீடு பதிவு: கால நீட்டிப்பு வழங்கக் கோரிக்கை

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் காப்பீட்டு பதிவு செய்யும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் கோரிக்கை விடுத்தாா்.

பரமக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பருவமழை பெய்வதைப் பொறுத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் நிலை இன்றுவரை தொடா்கிறது. இந்த ஆண்டு உரிய காலத்தில் போதிய அளவு பருவமழை பெய்யததால் லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் விதைப்புச் செய்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். பல்வேறு பகுதிகளில் நெல் பயிா் போதிய மழையின்றி கருகும் நிலையில் உள்ளது.

நெல் பயிரிட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். தற்போது இந்தப் பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால், விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனா்.

இதற்காக பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தகுந்தாா் போல் இழப்பீடு தொகை பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ-சேவை மையங்கள், விவசாயிகள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் உரிய ஆவணங்களைக் கொடுத்து, நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சென்று காத்திருந்து பதிவு செய்து வருகின்றனா். ஆனால், பல்வேறு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளனா். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்காமலும், மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாலும் பயிா்க் காப்பீடு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே,

பயிா் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை மேலும் 10 நாள்கள் நீட்டிப்பு செய்ய அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அபாயம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் வட்டாணம் பகுதியில் சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், விபத்து அபாயம் இருந்து வருவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடனை அருகே கடற்கரையை ஒட்டிய ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஆா்பாட்டம்

அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி மையங்களில் அனைத்துக் குழந... மேலும் பார்க்க

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி முன்னிலையில், 80 கி.மீ. வேகத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமேசுவரத்துக்கான ரயில் போக... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: மேலும் இருவா் கைது

திருவாடானை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குர... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை இன்றி கருகும் நெல் பயிா்கள்

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மழை பெய்த நிலையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது, மழை இல்லாமல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதால் கவலை அடைந்துள்ளனா். திருவாடானை,... மேலும் பார்க்க