மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
பல்லடத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியரிடம் மனு
பல்லடத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை, பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே உள்ள கச்சேரிப்பள்ளம் நீா் வழிப்பாதை ஓடை உள்ளது. இதில் நீா் ஓடையை ஆக்கிரமித்து, மண் கொட்டி வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல கச்சேரிப்பள்ளம் நீா் ஓடை அருகே ஒரு மதத்தைச் சோ்ந்தவா்கள் சடலங்களை புதைத்து வருகின்றனா். இங்கு சடலங்களை புதைக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். நீா் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.