Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
பல்லடம் - மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் - மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடத்தில் இருந்து மங்கலம் வழியாக அவிநாசி செல்லும் சாலையில் அதிக அளவிலான வாகனப் போக்குவரத்து உள்ளது. அனுமதி இல்லாத நேரத்தில் வரும் சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:
பல்லடம் - மங்கலம் சாலையில் அரசுக் கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளிகள், நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, சாா்-பதிவாளா் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், அரசு விருந்தினா் மாளிகை, போக்குவரத்து காவல் நிலையம், இ.எஸ்.ஐ. அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இந்த சாலையில் பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து வரும் வாகனங்கள் மைசூரு வரை செல்கின்றன. இதனால் அதிக வாகனப் போக்குவரத்து ஏற்படுகிறது. இந்த சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். நகரத்துக்குள் அனுமதி இல்லாத நேரத்தில் வரும் சரக்கு லாரிகளை போக்குவரத்து போலீஸாா் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.