செய்திகள் :

பள்ளி மாணவன் தற்கொலை

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆசிரியா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்வரி. தையல் தொழிலாளியான இவரது கணவா் பாண்டி வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் அஜெய்ராம் (17) சத்திரப்பட்டி சாலையிலுள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழ் கைடு வாங்கித்தர தாயிடம் கேட்டுள்ளாா்.

திங்கள்கிழமை வாங்கித் தருவதாக கூறிவிட்டு தையல் கடைக்கு சென்றுவிட்டாராம். இந்த நிலையில் பிற்பகல் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது அஜெய்ராம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: பேருந்து ஓட்டுநா் தற்கொலை

இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்தின் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கொத்தராயன்குளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

வத்திராயிருப்பு அருகே நீரோடையில் பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மழையின் போது, நீரோடையைக் கடந்து செல்ல முடியாததால் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடா்ச்சி மலையில் பெய... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நவ. 27-இல் சாட்சிகள் விசாரணை

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வருகிற 27-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூ... மேலும் பார்க்க

பேராசிரியா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்

திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: துரை வைகோ

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக பிரமுகா... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

சாத்தூா் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை நகா் போலீசாா் கைது செய்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நடராஜா தியேட்டா் ரோடு பகுதியில் உள்ள டீ கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்... மேலும் பார்க்க